தெலங்கானாவில் மனைவி மட்டன் கறி சமைக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானாவின் மகபூபாபாத் நகரைச்சேர்ந்த கலாவதி என்ற பெண் நேற்றிரவு மட்டன் கறி சமைக்கவில்லை என்று அவரது கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதும் ஆத்திரமடைந்த கணவர் மனைவி கலாவதியை கண்மூடித்தனமாக அடித்து கொலை செய்தார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் கலாவதியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.