மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
சென்னை எழும்பூர் – கடற்கரை இடையேயான நான்காம் ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனால், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவை இன்று மாலை 4 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வெளியூரிலிருந்து விரைவு ரயில் மூலம் தாம்பரம் ரயில் நிலையம் வந்திறங்கிய மக்கள், பேருந்துக்காக தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலைமோதியது கடும் கூட்ட நெரிசலை உருவாக்கியது. முன்னேற்பாடாக போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் தாம்பரம் பேருந்துநிலையத்தில் கூடிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.