சைக்கிளில் சென்ற சிறுவன் சில நொடிகளில்
2 முறை மரணத்திலிருந்து தப்பியுள்ளான்.
கேரளாவில் ஒரு பயங்கரமான விபத்திலிருந்து 8 வயது
சிறுவன் தப்பியுள்ளது அனைவரையும் திகைப்பில்
ஆழ்த்தியுள்ளது. சிசிடிவியில் பதிவான அந்த விபத்துக்
காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம், கண்ணூரில் தளிப்பரம்பா அருகேயுள்ள
சொருக்கலா என்னுமிடத்தில் மார்ச் 20 ஆம் தேதி மாலை
நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பெற்றோரிடம் அடம்பிடித்துக் கேட்டு வாங்கிய புது
சைக்கிளில் வீட்டைச்சுற்றி வலம்வந்துள்ளான் அந்தச்
சிறுவன். திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த சைக்கிள்
பரபரப்பான சாலையில் செல்லத் தொடங்கியது.
வேகமாகச் சென்றபோது எதிரே வந்த இரு சக்கர
வாகனத்தின்மீது மோதி சைக்கிளிலிருந்து அந்தச்
சிறுவன் கீழே விழுந்தான்.
சாலையில் சறுக்கி விழுந்தபோது மோட்டார் சைக்கிளின்
பின்னால் வந்த அரசுப்பேருந்து ஒன்று அந்தச் சிறுவனின்
சைக்கிள்மீது மோதியது. அதில் சிறுவன் காயமின்றித்
தப்பினான்.
சாலையின் மறுபுறம் உருண்டு சென்ற சிறுவன் திகிலுடன்
எழுந்து நிற்பதை அந்த வீடியோவில் காணமுடிந்தது. சைக்கிள்
நசுக்கப்பட்ட நிலையில் சிறுவன் காயமின்றிக் காணப்பட்டான்.
அதிர்ஷ்டவசமாக சில விநாடிகளில் 2 முறை மரணத்தின்
பிடியிலிருந்து தப்பியுள்ள சிறுவனின் விபத்து வீடியோக்
காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன.