ஏப்ரல் முதல்நாள்…! யார் முட்டாள்கள் ?

317
Advertisement

யாரையாவது முட்டாள் ஆக்க வேண்டும் எனவும் , நாம் யாரிடமும் முட்டாள் ஆகிவிடக்கூடாது என்றும் நினைத்துக்கொண்டே முந்திய நாளின் இரவை கலிபோற் நம்மில் ஏறலாம்.

சரி…….ஏன் ஏப்ரல் முதல் நாளை முட்டாள்கள் நாளையென்று சொல்கிறோம் ..? யாரு இந்த நாளை முட்டாள்கள் நாளுன்னு கண்டுபுடிச்சாங்க ? இது எல்லாம் தெரிஞ்சவங்க தாராளமா மத்தவங்கள முட்டாள்கள் என நினைத்து அந்நாளில் மற்றவர்களை ஏமாற்றலாம்.

காரணமே தெரியாமல் … மற்றவர்களை முட்டாள்கள் என நினைத்தால். அது அவர்கள் அல்ல …! அவர்களில் நீங்கள் என எடுத்துக்கொள்ளவும். அப்படினு முந்தையோர் கூறியுள்ளனர்.

சரி இனியாவது இதன் வரலாற்றை தெரிந்துகொள்ளுவோம் ! வாங்க…

மதினாராம் நூற்றாண்டுவரை ஐரோப்பியா கண்டத்தில் உள்ள நாடுகளில் ஏப்ரல் ஒன்றாம் தேதியை புத்தாண்டாக கொண்டாடிவந்துள்ளனர். பிறகு , 1562- ல் அப்போதிருந்த போப் 13 ஆம் கிரெகோரியார் , அதுவரை கடைபிடிக்கப்பட்டுவந்த ஜீலியன் காலண்டரை மாற்றி , கிரிகோரியன் காலண்டரை நடைமுறைப்படுத்தினார்.அதனடிப்படையில் தான் நாம் தற்போது ஆங்கில புத்தாண்டை ஜனவரி முதல் நாளாக கொண்டாடுகிறோம்.

போப்பின் இந்த முடிவை பல ஐரோப்பிய நாடுகள் உடனே ஏற்றுக்கொள்ளவில்லை, இருப்பினும் ஆண்டுகள் செல்ல செல்ல கொஞ்சம் கொஞ்சமாக இதனை ஏற்றுக்கொண்டனர். இதில் குறிப்பாக ‘ 1852 இல் பிரான்ஸிலும் , 1660 இல் ஸ்காட்லாந்து, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் நார்வே போன்ற நாடுகள் ,1700 களில் சில நாடுகளும் ஜனவரி முதல் நாளை புத்தாண்டாக ஏற்றுக்கொண்டன.

இருப்பினும் , சில மக்கள் ஜனவரி முதல் நாளை புத்தாண்டாக ஏற்றுக்கொள்ளவில்லை. பழைய வழக்கத்தையே கடைபித்துவந்தனர்.அதாவது ஏப்ரல் முதல் நாள்.

இப்படி ஏப்ரல் முதல் நாளை கொண்டாடுபவரை , ஜனவரி முதல் நாளை புத்தாண்டாக ஏற்றுக்கொண்டவர்கள் முட்டாள்கள் என அழைத்தனர்.

இப்படித்தான் ஏப்ரல் முதல் நாள் முட்டாள்கள் நாளுன்னு ஆரமிச்சாங்களாம்….!

ஆண்டின் தொடக்க மாதம் ஏப்ரல் தான் என எப்போதே வாதாடிய மக்களை சாடுகிறவிதம், இப்போதுவரை அர்த்தம் தெரியாமல் அடுத்தவரை ஏமாற்றும் பேர்வழிகளை எந்த ரகத்தில் சேர்ப்பது ?

இப்படி பட்டவர்கள் சிறிதேனும் சிந்திக்கும் சக்தி இருக்குமாயின் மேற்கண்ட வரலாறை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டி, அதுகுறித்த விளக்கங்களை தேடிப்பார்த்துருக்கலாம். அல்லது குறைந்தபட்சம் ஏப்ரல் மாதநாட்களின் சிறப்புகள் குறித்து அறிந்துகொள்ள முயற்சிக்கலாம்.

குறிப்பாக சில தினங்களை பார்ப்போம்

ஏப்ரல் முதல் நாளை , ” பார்வை சக்தி குறைவை தடுக்கும் ” நாளாக குறிப்பிட்டுருக்கிறார்கள் ( இது முட்டாள்கள் நாள் கொண்டாடுவோருக்கு ஏற்ற நாள் என்று கூடை கூறலாம் என கூறுவர் ) , நான்காம் நாளை ” குழந்தைகள் விபச்சாரத்தை தடுக்கும் ” நாளாகவும் , ஏழாம் நாளை “உலக ஆரோக்கியத்திற்கான” நாளாகவும்

பதினோராம் நாள் “பாதுகாப்பான குழந்தை பிரசவத்திற்கான” நாளாகவும் , பனிரெண்டாம் நாள் ” உலக விண்வெளி” நாளாகவும் , பதிமூன்றாம் நாள் ” ஜாலியன் வாலாபாக் படுகொலை” நாளாகவும் , பதினான்காம் நாள் ” அறிவர் அம்பேத்கார் பிறந்த மற்றும் பெண்கள் பாதுகாப்பு” நாளாகவும் , பதினேழாம் நாள் ” உலக ரத்த சோகை ஒழிப்பு” நாளாகவும் , என சொல்லிகொண்டே போகலாம் .

இவைகளையெல்லாம் கண்டும் காணாமலும் அதுபற்றிய சிந்தனையே சிறுதும்கூட இல்லாமலும் முட்டாள்கள் நாளாக தங்களைப்பற்றி தாங்களே கொண்டாடிகொள்வோரை இன்னும் எப்படி மேற்கோள்காட்டுவது ? மற்றவர்களை முட்டாள்களாக்க முந்தும் நம்மில் பலர் , தங்களை அறிவாளிகளாக நிரூபிக்க என்ன செய்யபோகிறார்கள் ? என்று கேட்கிறது வரலாறு.