காதலர் தினத்தினை முன்னிட்டு நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் சிறப்பு ஆஃபர் அறிவிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அக்னி பாலா தலைமையில் சிலர் தாலிக்கயிறுடன் அந்த பேக்கரி முன் எதிர்ப்பு தெரிவிக்க வந்தநனர்.
இந்நிலையில் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் அக்னி பாலா, சுரேஷ், மாரியப்பன், தினேஷ்ராஜா, கார்த்திகேயன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.