Monday, February 10, 2025

பணமோசடி வழக்கு : ராஜேந்திர பாலாஜி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 33 பேரிடம் 3 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் செய்தனர்.

இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தி, விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், வேலைக்காக பணம் கொடுத்தவர்களை அழைத்து, 70 லட்சம் வரை திருப்பிக் கொடுத்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வாக்கு மூலத்தை மாற்றிச் சொல்ல வேண்டும் என மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. பணத்தை திருப்பிக் கொடுத்தது, சாட்சிகளை மிரட்டியது தொடர்பாக ஆதாரங்களுடன், மாவட்ட குற்றப்பிரிவுக்கு புகார் அளித்ததாகவும், அந்த வழக்கின் மீது விசாரணை நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி ராஜேந்திர பாலாஜிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Latest news