ஹிமாச்சல பிரதேசத்தில் வரலாறு காணாத அளவில் பனிப்பொழிவு நிலவுவதால் 700 சுற்றுலா பயணிகள் சிக்கித்தவித்தனர். நேற்றைய தினம் அங்கு வெப்பநிலை மைனஸ் 7 டிகிரியாக பதிவானது.
கடும் பனிப்பொழிவால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. இதில் மாட்டிக்கொண்ட சுற்றுலா பயணிகள் 700 பேர் மீட்கப்பட்டனர்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை எதிரொலியாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஹிமாச்சல பிரதேசத்தில் குவிந்துள்ளனர்.