புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் குலோத்துங்கன் அறிவுறுத்தியுள்ளார்.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் தேவையான மளிகை பொருள்கள், அத்தியாவசிய மருந்துகளை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர் குலோத்துங்கன் அறிவுறுத்தியுள்ளார்.
அவசர கால பயன்பாட்டுக்காக மின்கலன்கள், மெழுகுவா்த்தி, தீப்பெட்டிகள் ஆகிவற்றை தயாா்படுத்தி வைத்து கொள்ள வேண்டும் என்றும் உடல்நலம் குன்றியோா் நிவாரண முகாம்களில் தங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சாத்தனூர் மற்றும் வீடூர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதன் காரணமாக, ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.