பண மழை பார்த்திருக்கீங்களா?

235
Advertisement

https://www.instagram.com/reel/CWd113Zjev1/?utm_source=ig_web_copy_link

பணமழை பெய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் சான்டியாகோ பகுதியிலிருந்து தெற்கு கலிபோர்னியாவிலுள்ள ஃபெடரல் டெபாசிட் இன்ஸ்சூரன்ஸ் கார்ப்பரேஷன் அலுவலகத்துக்கு 2021 ஆம் ஆண்டு, நவம்பர் 19 ஆம் தேதி பணப் பைகளை நிரப்பிக்கொண்டு டிரக் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

அந்த டிரக் காலை 9 மணியளவில் கார்ல் ஸ்பாட் சாலையிலுள்ள ஒருவழிப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது டிரக்கினுள் இருந்த பணப் பைகள் உடையத் தொடங்கின. இதனால் டிரக்கின் பின்பக்கத்திலிருந்த கதவு ஒன்று திறந்துகொண்டது.

கதவு திறந்துகொண்டதும் டிரக்கினுள் இருந்த பணப் பைகள் சாலையில் விழுந்து கரன்சி நோட்டுகள் பறக்கத் தொடங்கின. அதைப் பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சித் துள்ளலில் ஓடிவந்து கரன்சி நோட்டுகளை அள்ளிச்சென்றனர்.

இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் வைரலாகத் தொடங்கியது. இதனால் அந்தப் பகுதியில் அதிகம்பேர் குவியத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து கார்ல் ஸ்பாட் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், அங்கு இரண்டு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்தச் சூழலில், இந்த சம்பவம் பற்றி வழக்கு ஒன்று பதிவுசெய்யப்பட்டது.

இதற்கிடையில் சாலையில் எடுக்கப்பட்ட பணத்தைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு சான் டியாகோ யூனியன் ட்ரைபுன் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து பலர் பணத்தைத் திரும்பக் கொடுத்துவருகின்றனர்.

நம்ம பகுதியில பண மழை பொழியாதா என்கிற ஆவலை ஏற்படுத்தியுள்ளது இந்த வீடியோ.