காலை எழுந்தவுடன் டீ குடிப்பவரா நீங்கள்?

180
Advertisement

பெரும்பாலானோரின் காலைப் பொழுது ஒரு கப் சூடான டீ இல்லாமல் விடிவதே இல்லை.

டீயில் உடலுக்கு நன்மை தரும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இருந்தாலும், காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவது ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

தலைவலி போவதற்காக பலரும் டீ குடிப்பதை பழக்கமாக வைத்திருக்கும் நிலையில், வெறும் வயிற்றில் குடிக்கும் டீ தலைவலியை வரவைத்துவிடும். இரவு தூங்குவதால் அதிகம் தண்ணீர் பருகி இருக்க வாய்ப்பில்லை.

இதனிடையே, டீயில் உள்ள உட்பொருட்கள் வயிற்றில் வாயுவை உண்டாக்கி அஜீரணம் மற்றும் நீரிழப்பு ஏற்பட காரணமாக அமைகிறது.

மேலும், டீயில் உள்ள Tannin எனப்படும் வேதிப்பொருள் உணவில் உள்ள இரும்பு சத்தை உடல் உள்வாங்குவதை தடை செய்கிறது.

எனவே, டீயை சாப்பிடும் முன் அருந்தாமல், காலை உணவுக்கு பின் அல்லது மாலை வேலையிலோ பருகுவது நேர்மறையான விளைவுகளுக்கு வழி வகுக்கும் என கூறும் மருத்துவர்கள், மாலை மூன்று மணி டீ எடுத்துக்கொள்வதற்கு சிறப்பான நேரம் என கருத்து தெரிவிக்கின்றனர்.