சென்னை தாம்பரத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் ராஜராஜன் (37) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பெண்ணுக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் அலுவலக மேலாளர் ராஜராஜனை தாம்பரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவரை சிறையில் அடைத்தனர்.