ஜி.வி.பிரகாஷ்ஷின் ‘செல்பி’ படம் அடுத்த மாதம் ரிலீஸ்

421
Advertisement

இயக்குநர் வெற்றி மாறனின் உதவி இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் படம் ‘செல்பி’ . இந்தப் படத்தில் இயக்குநர் கவுதம் வாசு தேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . பிகில் திரைப்படத்தில் நடித்திருந்த வர்ஷா பொல்லம்மா இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேசன்ஸ்’ படத்தை தயாரித்துள்ளது .

இந்த நிலையில் செல்பி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி செல்பி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.