இலங்கையில் மன்னார் நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வழக்கு தெடர்பாக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்கள் மீது குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டின் போது 4 பேர் படுகாயமடைந்தனர். அதில் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் தப்பி சென்ற நிலையில் மன்னார் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.