குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் மாளிகை ராஜ் பவனில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இதில் கலந்து கொள்ள திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சிபிஎம் கட்சிகள் தெரிவித்தன.
நேற்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்த நிலையில் தற்போது தேநீர் விருந்தில் பங்கேற்க சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.