ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகிய கொரில்லா

287
Advertisement

இன்றைய உலகில் அனைத்து வயதினரும் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகி உள்ளனர். 4 அல்லது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தங்கள் பெற்றோரின் செல்போன்களில் கேம்களை விளையாடுவது எப்படி என்று தெரியும்.

இந்த  பழக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் , இறுதியில் ஒரு நபரின் பார்வை  பாதிக்கலாம் ,தீங்கு விளைவிக்கும் உடலியல், மன மற்றும் சமூக விளைவுகளுக்கு வழிவகுக்கும்  என்பதை நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுத்திவருகின்றனர்.

ஆனால் நவீன யுகத்தில் இதனால் பாதிக்கப்படுவது மனிதர்கள் மட்டும் அல்ல விலங்குகளும் தான் என்பது கொடுமை.

சிகாகோவின் லிங்கன் பார்க் மிருகக்காட்சிசாலையின் கொரில்லா ஒன்று , விலங்குகளும்  மொபைல் போன்ற திரைச் சாதனங்களுக்கு அடிமையாகிவருகிறது என்பதை நிரூபித்துள்ளது.

மிருகக்காட்சிசாலையில் உள்ள 16 வயதான 188 கிலோகிராம் எடை கொண்ட அமரே என்ற   கொரில்லா ,ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அடிமையாகிவிட்டதால் நாள்முழுவதும் அதனுடனே  நேரத்தை கழிக்கிறது என உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் , கொரில்லா உடன்  போட்டோக்களை எடுத்துக்கொள்வது. மீண்டும் அதனை அந்த கொரிலாவிற்கே போட்டுக்காட்டுவது போன்ற செயல்களால், போன் மீது அமரேக்கு ஆர்வம் அதிகமாயிற்று. அமரேவின் கவனத்தை திசை திருப்புவதால் , போன் மீதான ஆர்வத்தை  குறிகைக்க முடியும் என மிருகக்காட்சிசாலை கூறியுள்ளது.