மொத்தமா மாறப்போகும் Google Apps! Gmail,Calendar-லாம் இனி இப்படித்தான் இருக்கும்!

நாம டெய்லி காலையில எந்திரிச்சதுல இருந்து நைட் தூங்குற வரைக்கும் அதிகமா யூஸ் பண்றது இந்த கூகுள் ஆப்ஸ் தான். ஆனா, இனிமே நீங்க உங்க போனை ஓபன் பண்ணும்போது, அந்த ஆப்ஸ் எல்லாம் கொஞ்சம் வித்தியாசமா, புதுசா தெரியப்போகுது. ஆமாங்க, கூகுள் அவங்களோட லோகோக்களை மொத்தமா ரீ-டிசைன் பண்ணி ஒரு புது கலர்ஃபுல் லுக் கொடுக்கப்போறாங்க. இதோட மெயின் விஷயமே அந்த ‘கிரேடியன்ட்’ ஸ்டைல் தான். அதாவது ஒரு கலர் இன்னொரு கலரோட அப்படியே அழகா மிக்ஸ் ஆகி இருக்கும். இதுக்கு பின்னாடி ஏதோ ஒரு பெரிய ஏஐ (AI) கனெக்ஷன் இருக்குன்னு கூகுள் சொல்லிருக்காங்க.

ஏற்கனவே கூகுள் ஹோம், மேப்ஸ், ஜெமினி-னு சில ஆப்ஸ்க்கு இந்த லுக் வந்துடுச்சு. ஆனா இப்போதான் ஒரு பெரிய லிஸ்டே ரெடியாகிட்டு இருக்கு. இன்னும் சில வாரங்கள்ல நடக்கப்போற ‘Google I/O’ ஈவென்ட்ல இத பத்தின அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்னு எதிர்பார்க்கப்படுது. இப்போ வரைக்கும் வந்திருக்க தகவல்படி Gmail, Calendar, Meet, Keep, Tasks-னு எல்லாத்தோட ஐகானும் மாறப்போகுது. இதுல ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா, இதுவரைக்கும் கூகுளோட எல்லா ஆப்ஸ்லயும் அந்த நாலு கம்பெனி கலர்ஸையும் (அதாவது சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம்) உள்ள திணிக்கணும்னு பாப்பாங்க. அதனாலயே பல நேரங்கள்ல எந்த ஆப் எதுன்னே நமக்கு குழம்பிப்போகும்.

ஆனா இனிமே அந்த கவலை வேணாம். புது டிசைன்ல ஒவ்வொரு ஆப்புக்கும் ஒரு தனித்துவம் கொடுக்கப்போறாங்க. உதாரணத்துக்கு, கூகுள் டிரைவ் (Google Drive) பழையபடி பச்சை, மஞ்சள், நீலம்னு அதோட ஒரிஜினல் கலர்ல வருது. அதே மாதிரி கூகுள் கேலண்டர் (Calendar) இனிமே மொத்தமா அந்த நாலு கலரையும் தூக்கிட்டு, சிம்பிளா ஒரு டேட் போட்டு ப்ளூ கலர்ல வரப்போகுது. இது பாக்குறதுக்கே ரொம்ப நீட்டா இருக்கு. அதே மாதிரி கூகுள் சாட் (Chat) மற்றும் மீட் (Meet) இதெல்லாம் முன்னாடி ரொம்ப ரஃப்பா இருந்த மாதிரி இருந்துச்சு, ஆனா இப்போ நல்லா பப்ளியா, கார்ட்டூன் மாதிரி ரொம்ப பிளேஃபுல்லா மாத்திருக்காங்க.

கடைசியா ஒரு சர்ப்ரைஸ் என்னன்னா, பல காலமா எந்த அப்டேட்டும் இல்லாம இருந்த ‘Google Voice’ ஆப்புக்கும் ஒரு புது லோகோ வரப்போகுது. ஆனா லோகோ தான் மாறுதே தவிர, நம்ம எல்லாரும் ஆவலா காத்துட்டு இருக்கிற ஆர்சிஎஸ் (RCS) சப்போர்ட் வருமாங்குறது இன்னும் கேள்விக்குறிதான். மொத்தத்துல கூகுளோட இந்த புது அவதாரம் உங்க போன் ஸ்கிரீனை இன்னும் கொஞ்சம் அழகாக்கப்போகுதுங்கிறதுல சந்தேகமே இல்லை. இந்த புது லோகோ டிசைன்ல உங்களுக்கு எது ரொம்ப பிடிச்சிருக்குன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க

Related News

Latest News