மிகப்பெரிய அளவில் சரியும் தங்கம் விலை .. இப்போ வாங்கலாமா?

தங்கம் விலை சமீப காலமாக குறைந்துவிட்டதே என பலரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.தங்கம் விலை வேகமாக உயர்ந்த பிறகு பெரிய சரிவைச் சந்திப்பது வழக்கமான நிகழ்வு. 2022 செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை தங்க விலை 245 சதவீதம் உயர்ந்தது.இந்த அளவு உயர காரணமாக மத்திய வங்கிகளின் தீவிர கொள்முதலே முக்கியமாக கருதப்படுகிறது.

உலக நாடுகளின் மத்திய வங்கிகள், குறிப்பாக இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்டவை தங்களது கையிருப்பில் அதிகளவு தங்கத்தை வாங்கிச் சேமித்தன. மேலும் உலக அரசியல் பதற்றம், உக்ரைன்-ரஷ்யா போர் ஆகியவை முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி ஓடச் செய்தன. அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபரானதால் டாலர் மதிப்பு பலவீனமடையும் என்ற அச்சமும் தங்க விலையை உயர்த்த உதவியது.

ஆனால் தற்போது உலக தங்க கவுன்சில் அறிக்கைப்படி, உயர் விலையால் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.சீனாவில் நகை வாங்கல் 31 சதவீதமும், இந்தியாவில் 19 சதவீதமும் வீழ்ச்சியடைந்தது. இந்திய அரசும் தங்க இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது.இதனால் உலகளாவிய தங்க தேவை முதல் மூன்று மாதங்களில் 9 சதவீதம் சரிந்து 1,195.90 டன்னாகக் குறைந்துள்ளது.இத்தகைய வீழ்ச்சியிலும் தங்க விலை 20 சதவீத சரிவோடு நிலைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தங்க விலை அமெரிக்க வட்டி விகிதக் கொள்கை மற்றும் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்தே ஏற்ற இறக்கத்தைச் சந்திக்கிறது.

தங்க முதலீட்டாளர்கள் இப்போது அவசரப்படத் தேவையில்லை. சந்தை மாற்றக் கட்டத்தில் உள்ளது. உலகப் பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல் சீரடையும் வரை ஏற்ற இறக்கம் தொடரும். நீண்ட கால நோக்கில் தங்கம் எப்போதும் நம்பகமான முதலீடாகவே திகழ்கிறது.ஆகவே தங்கம் வாங்க நினைப்பவர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் பொறுமையுடன் காத்திருப்பது நல்லது

Related News

Latest News