தங்கத் தீவு

310
Advertisement

இந்தோனேஷிய மீனவர்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கப் புதையல்களைக் கண்டுபிடித்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

தங்கப் பொக்கிஷங்களுக்குப் புகழ்பெற்ற இந்தோனேஷிய அரசாட்சியின் தளமான தங்கத் தீவு என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீவிஜய ராஜ்ஜியம் 700 ஆண்டுகளுக்குமுன்பு காணாமல்போனதாகக் கருதப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக மீனவர்கள் இந்தத் தீவைத் தேடிவந்துள்ளனர்.

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் பாலேம்பாங் பகுதியில் உள்ள மூசி ஆற்றில் இரவு நேரத்தில் டைவ் அடிக்கும்போது இந்தத் தங்கத் தீவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு விலைமதிப்பற்ற ரத்தினங்கள், தங்கக் கட்டிகள், தங்க நாணயங்கள், தங்க மோதிரங்கள், நாணயங்கள், துறவிகளின் வெண்கல மணிகள் போன்றவை இருந்துள்ளன.

மேலும், ஆற்றங்கரையில் டன் கணக்கில் சீன நாணயங்கள், மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. இந்தியா, சீனா, பாரசீகம் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மண்பாண்டங்களும் மேஜைப் பொருட்களும் இருந்துள்ளன.

இவையனைத்தும் 7 ஆம் நூற்றாண்டுக்கும் 13 ஆம் நூற்றாண்டும் இடைப்பட்ட ஒரு சக்திவாய்ந்த ராஜ்ஜியமான ஸ்ரீவிஜய நாகரித்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. அப்போது இந்தப் பேரரசு WATER WORLD ஆக இருந்துள்ளது. மக்கள் மரப்படகுகளை உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளனர்.

அந்த நாகரிகம் முடிவுக்கு வந்ததும் அவர்களின் மரவீடுகள், அரண்மனைகள் நீருக்குள் மூழ்கிவிட்டதாகவும், ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு இந்த ராஜ்ஜியம் மர்மமான முறையில் மறைந்துவிட்டதாகவும் நம்பப்படுகிறது.

இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள், பாத்திரங்களை வைத்துப் பார்க்கும்போது அக்கால மக்கள் எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த ராஜ்ஜியம் இந்தியாவுடன் மிகநெருக்கமான உறவுகொண்டிருந்திருக்கிறது.