பொதுக்குழு வழக்கில் EPS வெற்றி பெற இது தான் காரணம்! வழக்கின் திசையை மாற்றிய 10 வாதங்கள்

74
Advertisement

கடந்த வருடம் ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூடிய போது ஈபிஎஸ், கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதோடு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன.

மேலும், அதிமுகவில் இருந்தும் ஓபிஎஸ்ஸை நீக்கி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து மனு தாக்கல் செய்ய, கட்சி சார்பில் அவைத் தலைவர் தமிழ் மகனும் ஈபிஎஸ்ஸும் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், பொதுக்குழு வழக்கில் டெல்லி உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஈபிஎஸ்ஸுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பொதுக்குழு வழக்கில் வெற்றியை சாத்தியப்படுத்திய ஈபிஎஸ் தரப்பினரின் பத்து வாதங்களை இப்பதிவில் பார்ப்போம்.

Advertisement

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததால் அவர்களை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கிய பொதுக்குழுவிற்கு அவற்றை நீக்கவும் அதிகாரம் உண்டு.

மேலும், கட்சியின் விதி எண் ஏழு படி, பொதுக்குழுவின் முடிவை ஏற்கும் நபரே கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும். பொதுக்குழுவில் 90 சதவீதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் ஈபிஎஸ்ஸுக்கு ஆதரவாக வாக்களித்து இருப்பதால் பெரும்பான்மை அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

செயற்குழுவால் தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. பொதுக்குழுவே அதிக அதிகாரம் கொண்டதென்பதாலும், கட்சியில் இரட்டை தலைமை விவகார சிக்கல்களை தீர்க்க ஒற்றைத் தலைமையை மீட்டெடுப்பது அவசியம் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

பொதுக்குழு கூட்டப்படுவது தெரிந்தும் ஓபிஎஸ் அங்கு வராமல் கட்சி விதிகளை மீறியுள்ளார். மேலும், இடைக்கால பொதுச்செயலாளர் பதவி தவறு என்றால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டும் எப்படி சரியாகும் என்ற கேள்வி எழுப்பப்பட்டு அதனாலேயே பொது செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சி உறுப்பினர்களில் ஒன்றில் மூன்று பங்கு உறுப்பினர்கள் ஈபிஎஸ் பக்கம் இருப்பதாகவும், பொதுக்குழு விதிகளை மீறியதற்காக தான் ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியை இழந்துள்ளதாகவும் வாதிடப்பட்டது.

பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற தற்போதைய தீர்ப்பு ஈபிஎஸ்ஸை அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக உயர்த்தி நிறுத்தியுள்ள அதே நேரத்தில், ஓபிஎஸ்ஸின் அரசியல் பாதையில் குழப்பமான இருள் சூழ்ந்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் நடக்க உள்ள சமயத்தில், பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல ஈபிஎஸ்ஸுக்கு இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.