வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் விலை குறைப்பு

90

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் 2 ஆயிரத்து 508 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள்  குறைத்துள்ளன.

அதன்படி, 19 கிலோ சிலிண்டருக்கு 134 ரூபாய் குறைக்கப்பட்டு, 2 ஆயிரத்து 373 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர், ஆயிரத்து 18 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல், டெல்லியில் 2 ஆயிரத்து 219 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 2 ஆயிரத்து 322 ரூபாய்க்கும், மும்பையில் 2 ஆயிரத்து 171 ரூபாய்க்கும் சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது.