‘ரீல்ஸ் To ரூல்ஸ்’ – ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் மாற்றிய முதல்வர் ‘விஜய்’!

நேற்று வரை தியேட்டர் வாசல்லயும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலயும் “தளபதி.. தளபதி..” என்று சுற்றிக் கொண்டிருந்த தமிழக இளைஞர்கள், இன்று காலையிலேயே டிவியைத் திறந்து சட்டசபை கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? இது ஏதோ கற்பனை கிடையாது, இன்று தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கும் ஒரு நிஜமான சமூகப் புரட்சி. இதற்கு ஒரே ஒரு பெயர்தான் காரணம்.. அது முதலமைச்சர் விஜய்!

“நாங்கள் பாட்டுக்கு ஜாலியாக ரீல்ஸ் பார்த்துக் கொண்டு இருந்தோம், எங்களை 24 மணி நேரமும் செய்திகளையும் சட்டசபையையும் பார்க்க வைத்துவிட்டாயே விஜய் அண்ணா” என்று இளைஞர்களே மீம்ஸ் போட்டுத் தள்ளும் அளவுக்கு, தமிழக அரசியல் களம் இன்று ஒரு மிகப்பெரிய சினிமா தியேட்டராகவே மாறியிருக்கிறது.

ஒரு உச்ச நட்சத்திரத்தின் ரசிகர்கள், அவர் திரையில் பஞ்ச் டயலாக் பேசுவதைக் கொண்டாடுவதைப் போலவே, அவர் சட்டசபையில் ஒரு சட்டத்தை இயற்றுவதையும் ஒரு “லைவ் ஆக்‌ஷன்” திரைப்படத்தைப் போலவே பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதுதான் சினிமா பிம்பம் அரசியல் பிம்பமாக மாறும் அந்த மேஜிக்.

இதற்குப் பின்னால் இருக்கும் மிக முக்கியமான காரணம், விஜய் கடந்த பல ஆண்டுகளாக தனது மக்கள் இயக்கம் மூலம் மாணவர்களின் கல்விக்கும், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கும் போட்ட அந்த வலுவான அடித்தளம் தான். தங்களை வழிநடத்தும் ஒரு நபர் மிக உயரிய பதவியில் இருக்கும்போது, அந்த அமைப்பின் மீது இளைஞர்களுக்கு ஆர்வம் வருவது முற்றிலும் இயல்பானது. அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தபோது எப்படி எந்தத் தொடர்பும் இல்லாத இளைஞர்கள் கூட அரசியலைக் கவனிக்கத் தொடங்கினார்களோ, அதே போன்ற ஒரு சூழல் தான் இன்று தமிழகத்திலும் நிலவுகிறது.

இன்றைய ஜென்-இசட் இளைஞர்களுக்கு அரசியலை ஒரு பாடமாகச் சொன்னால் பிடிக்காது, ஆனால் அதை ஒரு சுவாரஸ்யமான மீம் கலாச்சாரமாக மாற்றினால் அவர்கள் அதை உற்று நோக்குவார்கள். முதலமைச்சர் விஜய்யின் ஒவ்வொரு நகர்வும், அவர் எதிர்க்கட்சிகளுக்கு அளிக்கும் பதிலடிகளும் இன்று சமூக வலைதளங்களில் ‘மாஸ்’ வீடியோக்களாக ட்ரெண்ட் ஆகின்றன. இதன் மூலம், இதுவரை அரசியலில் இருந்து விலகி இருந்த பல லட்சக்கணக்கான இளைஞர்கள், இன்று தங்களின் உரிமைகளையும் அரசின் திட்டங்களையும் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர்களாக மாறியிருக்கிறார்கள். இது ஜனநாயகத்திற்கு ஒரு ஆரோக்கியமான அறிகுறி என்றே சொல்லலாம்.

பொழுதுபோக்கில் திளைத்திருந்த ஒரு தலைமுறையை, அதிகாரத்தின் பக்கமும் விழிப்புணர்வின் பக்கமும் திசை திருப்பியிருக்கும் இந்த மாற்றம், வரும் காலங்களில் தமிழக அரசியலில் இன்னும் என்னென்ன அதிரடிகளைக் கொண்டு வரப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News