ஃப்ரிட்ஜில் உள்ள ஐஸ் வாட்டரை நேரடியாக குடிப்பது நல்லதா?

வெயில்காலங்களில் அதிக வெப்பம் காரணமாக குளிர்ந்த நீர், குளிர்பானங்கள் போன்றவற்றை குடிக்க பலருக்கும் விருப்பம் ஏற்படும். முன்பெல்லாம் ஹோட்டல்களில் சாப்பிட்ட பிறகு டீ அல்லது காபி குடிப்பதே வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது ஐஸ்கிரீம், ஜூஸ் போன்ற குளிர்ந்த உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

ஆனால் இவ்வாறு அதிகமாக குளிர்ந்த பானங்களை அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

குளிர்ந்த நீரை அதிகமாக குடிப்பதால் மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஐஸ்கிரீம் அல்லது அதிக ஐஸ் சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை குடிக்கும் போது ஏற்படும் பாதிப்புகள், குளிர்ந்த நீர் குடிப்பதாலும் ஏற்படலாம். இது உடலிலுள்ள சில நரம்புகளை பாதித்து தலைவலி ஏற்படக் காரணமாக இருக்கலாம்.

மேலும் பிரிட்ஜில் இருந்து நேரடியாக குளிர்ந்த நீரை குடிப்பது உடல்நலத்திற்கு பல தீமைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக சாப்பிட்ட உடனே குளிர்ந்த நீர் குடிப்பது செரிமானத்திற்கு பாதிப்பை உண்டாக்கும். சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய் பொருட்கள் திடமாக மாறி செரிமான செயல்முறையை பாதிக்கக்கூடும்.

இதற்கு மாற்றாக, தினமும் வெந்நீர் அல்லது வெதுவெதுப்பான நீரை குடிப்பது நல்லது. குறிப்பாக சாப்பிட்ட பிறகு வெந்நீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புபவர்கள் வெந்நீரை வழக்கமாக குடிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

வெந்நீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், நரம்பு மண்டலத்தை சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகிறது. சூடான நீரை குடிக்க முடியாதவர்கள் குறைந்தது காய்ச்சி ஆறவைத்த நீரை பருகலாம். காய்ச்சிய நீர் குடிப்பது நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

Related News

Latest News