இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஹிதா ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்து குவிப்பு புகார் தொடர்பாக இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஹிதா ராஜபக்சேவை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஏற்கனவே சொத்து குவிப்பு புகார் தொடர்பாக யோஷித ராஜபக்சேவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். தற்போது அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.