Sunday, July 6, 2025

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்..!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92.

2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். சுமார் 33 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news