Thursday, April 24, 2025

தர்பூசணி விவகாரம் : உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பணியிட மாற்றம்

சென்னை மண்டல உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியான சதீஷ் குமார் தர்பூசணியில் ரசாயனம் சேர்க்கப்பட்டதாக தெரிவித்தார். சதீஷ்குமார் பேச்சால் தர்பூசணி விற்பனை அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து இருந்தனர்.

சதிஷ்குமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அரசியல் தலைவர்கள், பாதிக்கப்பட்டுள்ள தர்பூசணி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில் தீஷ்குமார் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Latest news