Wednesday, February 19, 2025

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. சுருளி அருவிக்கு தமிழக முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுருளி அருவியில் இன்று சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Latest news