உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள மகா கும்பத்தில் காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
சில நாட்களுக்கு முன்பு மகா கும்பமேளாவில், சுமார் 31 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில் தற்போது அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.