ஆண் கொலைக் குற்றவாளிக்கு முத்தமிட்ட பெண் நீதிபதி

363
Advertisement

அர்ஜென்டினா நாட்டில் காவல்துறை அதிகாரியைக் கொலைசெய்த ஆண் குற்றவாளிக்குப் பெண் நீதிபதி ஒருவர் முத்தமிட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது.

அர்ஜென்டினாவில் 2009 ஆம் ஆண்டில் லியாண்டோ டிட்டோ ராபர்ட்ஸ் என்ற காவல்துறை அதிகாரியை மாய் புஸ்டோஸ் என்ற ஆசாமி கொலைசெய்துவிட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து முடிவுசெய்ய நீதிபதிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே பெண் நீதிபதி மரியல் சௌரேஸ் மட்டுமே. இவர் அந்நாட்டின் தெற்கு சுபுட் மாகாணத்தில் நீதிபதியாகப் பணிபுரிந்துவருகிறார்.

நீதிபதிகள் குழு கொலைக்குற்றவாளியான மாய் புஸ்டோஸுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப் பரிந்துரை செய்தது. அதனை ஏற்று நீதிமன்றமும் கொலைக்குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. அதைத் தொடர்ந்து மாய் புஸ்டோஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், குற்றவாளி அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி சென்றுள்ளார் பெண் நீதிபதி மரியல் சௌரேஸ்.
அங்கு, குற்றவாளி மாய் புஸ்டோஸின் கன்னத்தில் முத்தமிட்டுள்ளார் நீதிபதி மரியல். இது அங்குள்ள சிசிடிவியில் பதிவாதிவிட்டது. அதை எடுத்து யாரோ சமூக வலைத்தளங்களில் பதிவிடத் தற்போது அந்த வீடியோ வைரலாகிவிட்டது.

இந்த சம்பவத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் கொலைக்குற்றவாளி புஸ்டோஸை பெண் நீதிபதி மரியல் காப்பாற்ற முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் ஆண் கொலைக்குற்றவாளிக்கு முத்தமிட்ட பெண் நீதிபதியின் செயல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றிக்கூறியுள்ள பெண் நீதிபதி மரியல் நாங்கள் இருவரும் சந்திப்பது இதுவே முதன்முறை. இந்தக் கொலை வழக்கு பற்றி நான் புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதற்காகத்தான் புஸ்டோஸை சந்தித்தேன் என்று விளக்கமளித்துள்ளார்.

என்றாலும், பெண் நீதிபதிமீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது அந்நாட்டு உயர்நீதிமன்றம்.