Monday, January 26, 2026

2 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த குழந்தையின் தந்தை கைது

கரூரில் தான் பெற்ற 2 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கரூர் மாவட்டம், சோமூர் கிராமத்தைச்சேர்ந்த கார்த்திகேயனுக்கு மனைவி மற்றும் 4 வயதில் மகன், 2 வயதில் மகள் உள்ளனர். கார்த்திகேயன் இரவு 2 வயது பெண் குழந்தையை மாடிக்கு தூக்கிச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. அந்த குழந்தை கண்விழித்து அப்பா என்று கூப்பிட்டதும் பயந்துபோன கார்த்திகேயன், சிறுமியை தண்ணீர் தொட்டிக்குள் போட்டு விட்டு கீழே சென்று படுத்துக்கொண்டார்.

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை காணாததால், தாய் மொட்டை மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு சிறுமியின் உடைகள் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய், தண்ணீர் தொட்டிக்குள் பார்த்துள்ளார். அங்கு கிடந்த குழந்தையை தூக்கிக்கொண்டு காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

கார்த்திகேயனை பிடித்து, கரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியபோது உண்மை அம்பலமானது. அதனையடுத்து, தந்தை கார்த்திகேயனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related News

Latest News