திருத்தணி அருகே வேலூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மற்றும் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அணைத்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்களை திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிப்பர் லாரி அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விபத்திற்கு காரணமான டிப்பர் லாரி ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகிறது.