Friday, March 21, 2025

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு : நாடு முழுவதும் ஃபாஸ்டேக்கில் புதிய விதிமுறைகள் அமல்

ஃபாஸ்டேக் நடைமுறைகளில் நாடு முழுவதும் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. புதிய விதிப்படி, ஃபாஸ்டேக்கில் குறைவான பேலன்ஸ் இருந்தால், எல்லா டோல் கேட்டிலும் ரீசார்ஜ் செய்ய இயலாது.

குறைந்த பேலன்ஸ் காரணமாக பாஸ்டேக் பிளாக் லிஸ்ட் ஆகியிருந்தால், சுவச்சாவடி செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ரீசார்ஜ் செய்ய வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட வாகனங்களின் பாஸ்டேக் ஏற்றுக்கொள்ளப்படாது.

ஃபாஸ்டேக் பரிவர்த்தனை குறைந்த பேலன்ஸ் காரணமாக கேன்சல் செய்யப்பட்டால் இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும். அத்துடன் டோல் கேட்களில் பிளாக் லிஸ்ட் ஆகிருக்கும் பாஸ்டேக்கை பயன்படுத்த கூடாது.

ஃபாஸ்டேக் குறித்தான தற்போதைய நிலையை NPCI போர்ட்டலில் (https://www.npci.org.in/what-we-do/netc-fastag/check-your-netc-fastag-status) என்ற அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் வாகன ஓட்டிகள் சரிபார்க்கலாம்.

Latest news