ரொம்ப நேரம் உக்காராதீங்க…உயிருக்கே ஆபத்தாம்!

145
Advertisement

மாறி வரும் காலசூழ்நிலை மற்றும் அதிகரித்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் நடைமுறை வழக்கமாகி விட்டது.

ஏசி அறைகளில் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் அவ்வப்போது இருக்கையில் இருந்து எழுந்து கண்களுக்கும் மூளைக்கும் ஓய்வு அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆனால், American Journal Of Preventive Medicine என்னும் ஆய்வு பத்திரிகையில் அண்மையில் வெளியான கட்டுரை, நீண்ட நேரம் அமர்ந்திருப்பது ஆயுளை குறைக்கும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஒரு நாளில் தொடர்ந்து மூன்று மணி நேரம் அமர்ந்திருப்பதால், சராசரியாக 1.4 ஆண்டுகள் வரை ஆயுள் குறைவதாக தகவல் வெளிவந்துள்ளது.

Advertisement

ஒரு மணி நேரம் உட்கார்ந்தே இருப்பது ஒரு சிகரெட் புகைப்பதற்கு சமம் என்றும் இதனால் ஆயுளில் 2.18 நிமிடங்கள் வரை குறைவதாகவும் வேறொரு ஆய்வு கூறுகிறது.

தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் உட்கார்ந்து இருக்காமல் அவ்வப்போது எழுந்து நின்றாலோ நடந்தாலோ, ஆயுள் காலம் கிட்டத்தட்ட 2 மாதங்கள் வரை கூடுவதாக கூறும் ஆராய்ச்சியாளர்கள், உடற்பயிற்சி செய்தாலும் மீதி நேரம் அமர்ந்தே இருப்பது உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் எனவும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குவதே ஆரோக்கியமான வாழ்க்கைமுறை என கருத்து தெரிவிக்கின்றனர்.