Wednesday, March 12, 2025

ஈரோடு இடைத்தேர்தல் : சீமான் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுகவும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலையொட்டி அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் பொதுக்கூட்டம் நடத்தியதாக சீமான் மீது பறக்கும் படை அதிகாரி நவீன் புகார் அளித்தார். இதன் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் சீமான் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே சீமான் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Latest news