வேலையை விட்டுவிட்டு ” பிரியாணி கடை ” வைத்த பொறியாளர்கள்

424
Advertisement

நம்மில் பலரும் தங்கள் வேலைகளில் அதிருப்தி அடைவதுண்டு ஆனால் புதியதைத் தொடர நிலையான வேலையை விட்டுச் செல்ல தைரியம் இல்லை. இங்கோ இரு பொறியாளர்கள் தங்கள் வேலையை விட்டுவிட்டு பிரியாணி கடை தொடக்கி உள்ளனர்.

ஹரியானாவின் சோனேபட்டில் உள்ள இரண்டு பொறியாளர்கள், தங்கள் வேலையில் கிடைக்கும் சம்பளத்தில் திருப்தி அடையவிலை என்பதால் தங்கள் வேலையை விட்டுவிட்டு உணவு வியாபாரத்தில் நுழைய முடிவு செய்தனர்.

அதன்படி வேலையை விட்ட பொறியாளர்களான ரோஹித் மற்றும் சச்சின் கூட்டாக ஒரு காய்கறி பிரியாணி வியாபாரத்தை தொடங்கி, அவர்களின் கடைக்கு ” பொறியாளர்கள் வெஜ் பிரியாணி ” என்று பெயரிட்டுள்ளனர்.

இருவரும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பொறியியல் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் பாலிடெக்னிக் படிக்கும் போது, சச்சின் பி.டெக் படித்தார். ஆனால், வேலையில் திருப்தி இல்லாததால் பிரியாணி விற்க முடிவு செய்தனர். அவர்கள் இப்போது தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அவர்களின் புதிய வணிகம் தங்களுக்கு சிறந்த ஊதியம் தருவதாகவும் கூறுகிறார்கள்

மேலும், 50 மற்றும் 70 ரூபாய்க்கு எண்ணெய் இல்லாத ஸ்பெஷல் கிரேவி வெஜ் பிரியாணி மற்றும் ஆச்சாரி வெஜ் பிரியாணி என இரண்டு வகையான பிரியாணிகளை விற்பதாகவும் இதற்கு தரமான அரிசியைப் பயன்படுத்துவதாகக் கூறுகிறார்கள்.

அவர்களது வெஜிடபிள் பிரியாணி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதால், அவர்களுக்கு நல்ல வருமானமும் கிடைத்து வருகிறது. தற்போது தங்கள் தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர் இந்த முன்னாள் பொறியாளர்கள். இந்நாள் முதலாளிகள்