60 செயற்கைக்கோள்கள் மூலம் இன்டர்நெட் ஸ்பீட்டை அதிகரிக்க எலோன் மஸ்க் நிறுவனம் முயற்சி

381
Advertisement

எலோன் மஸ்க் என்பவர் தான் இன்றைய தேதியில் உலகில் முக்கிய நபராக அறியப்படுகிறார் .பல்வேறு தொழில்களில் ஈடுபடும் அவரது நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி நிறுவனத்தையும் நடத்திவருகிறது . இந்நிறுவனம் கமெர்சியல்லாகவும் , தங்களின் சொந்த தேவைக்காகவும் செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் வேகமான இணையசேவைக்காக ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்த இந்நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. முதற்கட்டமாக புளோரிடாவில் இருந்து தலா 260 கிலோ எடையிலான 60 செயற்கைக் கோள்களை கடந்த ஆண்டு விண்ணில் செலுத்தியது. பின்னர் 2-ம் கட்டமாக மேலும் 60 செயற்கை கோள்களை கேப் கேனவெரலில் இருந்து விண்ணில் செலுத்தியது.மேலும் 60 செயற்கைக்கோள்களை பால்கான்-9 ராக்கெட் மூலம் புளோரிடாவின் கேப் கேனவெரலில் இருந்து நேற்று காலை 10:05 மணிக்கு விண்ணில் செலுத்தியது.இவை அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்றும் .இதில் பால்கான் என்ற செயற்கை கோல் மட்டும் இனைய சேவையின் வேகத்தை அதிகரிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளது