சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி-கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதன்காரணமாக சென்டிரல்-சூலூர்பேட்டை இடையேயான 24 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதனால் இன்று மட்டும் சென்ட்ரல்-பொன்னேரி இடையேயும், சென்டிரல்-மீஞ்சூர் இடையேயும், சென்ட்ரல் -எளாவூர் இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.