தொப்பை குறைய இத குடிச்சா போதும்!

50
Advertisement

அதிக உடல் எடை இல்லாத சில நபர்களுக்கு கூட தொப்பை மட்டும் இருக்கும்.

இதற்கு என்ன காரணம் என எப்போதாவது யோசித்தது உண்டா? நம் உணவு மூலம் உட்கொள்ளும் கொழுப்பை செரிமானம் செய்வதிலும், உடலுக்கு தேவையான சத்துக்களாக மாற்றுவதிலும் முக்கிய பங்கு வகிப்பது கல்லீரல்.

கல்லீரலின் செயல்பாடு குறையும் பட்சத்தில், வயிற்றை சுற்றி கொழுப்பு சேர்ந்து தொப்பை ஏற்படுகிறது.

Advertisement

கல்லீரல் செயல்பாட்டை   அதிகரிக்க கூடிய நெல்லிக்காய், இஞ்சி மற்றும் எலுமிச்சையை சேர்த்து எடுத்து கொண்டால் இயற்கையாக தொப்பை குறைவதற்கு சாதகமான சூழல் உருவாகிறது. 

ஒரு பெரிய நெல்லிக்காயை சிறு துண்டு இஞ்சியுடன் அரைத்து, அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொள்ளவும்.

காலை எழுந்தவுடன்,  இந்த பானத்தை சிறிய அளவுகளில் ஒரு மணி நேரத்திற்குள்ளாக குடித்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு மூன்று மாதத்திற்கு தொடர்ந்து செய்தால், கல்லீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டு நல்ல பலன் கிடைக்கும் என உணவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.