முகப்பரு தழும்புகளை குணமாக்கும் வீட்டு மருத்துவம்!

25
Advertisement

பலருக்கும் தீராத தொல்லையாக உருவெடுப்பது முகப்பருக்கள். முகத்தின் ஆரோக்கியம் மற்றும் அழகை பாதிப்பதும் இல்லாமல், முகப்பரு வந்து போன பின்னும், போகாத தழும்புகள் இன்னொரு பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது.

ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து போராடும் தன்மை கொண்ட தேங்காய் எண்ணையை தழும்புகளின் மீது தடவுவதால் அவை படிப்படியாக குறையும்.

நுண்ணுயிர் கிருமிகளை அழிக்கும் மஞ்சள், முகப்பரு தழும்புகளின் வீரியத்தை குறைப்பதோடு சரும நிறத்தையும் மேம்படுத்துகிறது.

Advertisement

உள்வீக்கத்தை குறைத்து, பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும் டீ மர எண்ணெயை தண்ணீரில் கலந்து தழும்பு இருக்கும் இடத்தில் பயன்படுத்துவது சிறப்பான பலன்களை தரும்.

சரும சிக்கல்களுக்கு சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிற சோத்து கற்றாழை சாறு முகப்பரு தழும்பு விரைவில் சரியாக வழிவகுக்கும்.

ஆரோக்கியமான சருமத்திற்கு தேவையான விட்டமின் மற்றும் மினரல்கள் அடங்கிய முல்தானி மிட்டியை சந்தனம் மற்றும் மஞ்சளுடன் சேர்த்து facepack போல போட்டு வந்தால், முகப்பரு தழும்புகளின் தாக்கம் நாளடைவில் குறையும் என எதிர்பார்க்கலாம்.