டெல்லியில் இன்று கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இந்த மோசமான வானிலை காரணமாக 92 விமானங்கள் இயக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விமானங்கள் புறப்பாடு மற்றும் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.
பனிமூட்டம் காரணமாக 6 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனிடையே புதுப்பிக்கப்பட்ட விமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு, டெல்லி சர்வதேச விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.