கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் பெண்களுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல முயன்றனர்.
அப்போது மதுபோதையில் இருந்த அந்த இளைஞர் போலீசை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். இதையடுத்து அந்த இளைஞரை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர்.