அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அகினேஷ்புரம் கிராமத்தை சேர்ந்தவர் தோனி இஸ்ரவேல் (19). மது அருந்து பழக்கம் உள்ள இவர் டாஸ்மாக் கடைக்கு அருகே இடது புரத்தில் உள்ள தண்ணீர் இல்லா உறை கிணற்றில் எதிர்பாராத விதமாக குடிபோதையில் தவறி விழுந்தார். இதனை அவ்வழியாக வந்தவர்கள் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தோனி இஸ்ரவேலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் குடிபோதையில் இருந்த தோனி இஸ்ரவேல் இடது கணுக்காலில் அடிபட்டு நான்கு தையல்கள் போடப்பட்டது.
அங்கு தீயணைப்பு துறையினர் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு அவரை மீட்டு வெளியில் கொண்டு வந்த போது குடிபோதையில் மருத்துவமனைக்கு வராமல் மறுத்து பிடிவாதம் செய்தார். ஒரு வழியாக அங்கிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 மூலம் அனுப்பி வைத்தனர்.