நான் உனக்கு மட்டும் செல்லாகுட்டி இல்ல…
நாயின் வைரல் வீடியோ

200
Advertisement

செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் மனிதர்களின் வாழ்க்கையை மதிப்புமிக்கதாக ஆக்குகின்றன. நாய்களை விரும்புபவர்களுக்கு, அவைகளை செல்லமாக வளர்க்க முடிந்தால் அது எப்போதும் ஒரு விருந்தாகும்.

நாய்கள் செய்யும் குறும்புத்தனமான செயல்கள் எப்போதுமே நம்மை மகிழ்ச்சியடைய செய்யும்.சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் ,

நெல்சன் என்ற நாய் ஒரு நடைபாதையில் அதன் தரை விரிப்பில் அமர்ந்துள்ளது. அவ்வழியாக செல்பவர்கள் அந்த நாயை தலையில் தடவி கொடுத்தும் , அதற்கு ஷேக் ஹன்ட்ஸ் கொடுத்தும் அன்பை பரிமாறிக்கொள்கின்றனர்.

https://www.instagram.com/p/CbYOV2ODHXo/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

இந்த நாயின் எஜமானர் இந்த வீடியோவுடன் ,

“நெல்சனின் வாழ்க்கை நோக்கம் மக்களை மகிழ்ச்சியடையச் செய்வதே” . என் நாய் என்னுடன் வேலைக்குச் செல்லும் போது. அவ்வழியே செல்பவர்களை அங்கேயே அமர்ந்து பார்ப்பது அவருக்குப் பிடிக்கும். யாரோ அவரை செல்லமாக வளர்க்கும் வரை காத்திருக்கிறேன். அதுவே அவருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, ”என்று கூறியுள்ளார்.

மனதை கவரும் இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.