Saturday, December 6, 2025

இந்த 3 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

இருமல் மருந்தை உட்கொண்ட 23 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த நிறுவனம் தயாரித்து வந்த கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் மேலும் 2 இருமல் மருந்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களின் தயாரிப்பான கோல்ட்ரிப், ரெஸ்பிப்ரெஷ் டி.ஆர், ரீலைப் ஆகிய 3 இருமல் மருந்துகள் பாதிக்கப்பட்ட மருந்துகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்த மருந்துகள் குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துவதாகவும், கடுமையான, உயிருக்கு ஆபத்தான நோயை ஏற்படுத்தக்கூடியவை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News