அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரீஸ் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் இன்று (ஜனவரி 20) டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவின் 47ஆவது அதிபராக பதவியேற்றார். துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் பதவியேற்றார். அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.