மழைக்கோட்டு, டென்ட் அமைக்கப் பயன்படும் உடைகள்,
பைகள், ஜீப்புகள் போன்ற வாகனங்களுக்குப் பயன்படும்
கவர் போன்றவை தண்ணீராலும் கடும் மழையிலும் நனையாத
வகையில் உள்ளது.
இத்தத் துணி வகைகள் எப்படித் தயாரிக்கப்படுகிறது தெரியுமா?
இதோ இப்படித்தான்..
சிந்தட்டிக் பைபர்களால் தயாரிக்கப்பட்ட இந்தத் துணி சிலிக்கான்
ரெஸினில் நனைக்கப்படுகிறது. பிறகு, சூடாக்கப்பட்ட இரண்டு
சிலிண்டர்களிடையே செலுத்தப்படுகிறது- இதனால் ரெசின் துணியில்
நன்கு பதிக்கப்படுகிறது. பின்னர், தைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
சிலிகான் ரெஸின் பதிக்கப்பட்ட இந்தத் துணி மழையிலோ
தண்ணீரிலோ நனைவதில்லை.
தற்போது ரெக்ஸின் ஷீட் மூலம் ரெயின் கோட் சுலபமாகத்
தயாரிக்கப்படுகிறது. லாரிகளில் பயன்படுத்தப்படும் தார்ப்பாய்
இந்த முறையில்தான் தயாரிக்கப்படுகிறது-