இப்படிச் சாப்பிடக் கூடாதாம்….

274
Advertisement

உணவை எப்படி சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிடக்கூடாது என்பதை சித்தர்கள் வரையறுத்துள்ளனர்.

சாப்பிட உட்கார்ந்ததும் உணவைப் பார்த்துக்கொண்டே சாப்பிட வேண்டுமாம்….கண்கள் செரிமானத்துக்கு ஏற்பாடு செய்யுமாம்.. கண்களிலிருந்து வெளிப்படும் வெப்பம் உணவை செரிக்கச் செய்யும். அதனால், சாப்பிடும்போது முழுக்கவனமும் உணவின்மீதே இருக்க வேண்டுமாம்.

கவனம் சிதறாமலிருக்கவே செல்போன் பார்ப்பது, டிவி பார்ப்பது, நண்பர்களுடன் பேசுவது, புத்தகம் படிப்பது போன்ற செயல்களைத் தவிர்க்கச் சொல்லியிருக்கிறார்கள். உணவிலிருந்து வேறுபக்கம் கவனம் சென்றால் செரிமானக் கோளாறு ஏற்படலாம் என்கிறார்கள் சித்தர்கள்.

வயிற்றிலுள்ள வெப்பம் உணவை செரிக்கச் செய்கிறது. அதனால், பசித்தவுடன் சாப்பிடுவதே சரியான உணவுப் பழக்கம். பசிக்காமல் சாப்பிடுவது செரிமானக் கோளாறை உருவாக்கலாம்.

சாப்பிடத் தொடங்கும்முன் கைகால்களைக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். தரையில் அமர்ந்து கால்களை மடக்கி சம்மணமிட்டு சாப்பிட வேண்டும். கால்களை மடக்கி உட்கார்வதால், கல்லீரல், செரிமான சுரப்பிகள் நன்கு வேலைசெய்யும். சர்க்கரை நோய் வருவது தவிர்க்கப்படும்.

உணவைக் கையால் நன்கு பிசைந்து சாப்பிட வேண்டும். சாப்பிடும்போது உதடுகளை நன்குமூடிக்கொண்டு உணவை நன்றாக சுவைத்து உண்ண வேண்டும். அப்போதுதான் நாவில் உமிழ்நீர் நன்கு ஊறி உணவை செரிக்கச் செய்யும். அவசரம் அவசரமாக, பதற்றமாகவோ சாப்பிட்டால் உணவு செரிக்காது.

சாப்பிடும்போது இடையிடையே தண்ணீர் குடித்தாலும், செரிமான சக்தி குறையும். விக்கல் எடுத்தாலோ, காரம் அதிகமாக இருந்தாலோ அன்றி, தண்ணீர் குடிக்கக்கூடாது. சாப்பிட்டு முடித்து 30 நிமிடங்கள் கழித்தபிறகே தண்ணீர் பருகவேண்டும். அப்போதுதான் ஜீரண சக்தி அதிகரிக்கும். நோய் வராது.

சாப்பிடும்போது முதலில் வரும் ஏப்பம், வயிற்றின் வெற்றிடத்தை நிரப்பியுள்ள காற்று என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது முறையாக வரும் ஏப்பம், சாப்பாடு போதும் என்பதை உணர்த்துகிறது என்பதை மறக்கக்கூடாது. அதற்குமேலும் சாப்பிட்டால், அது உடலின் தேவைக்கு அதிகப்படியான உணவு என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

இப்படிச் சித்தர் சொன்னபடி சாப்பிட்டு வந்தால், எந்த நோயும் உடலில் ஏற்படாது. குறிப்பாக, நீரிழிவு நோயைக்கூடக் குணப்படுத்திவிடலாம்.

இன்றைக்குப் பலர் செல்போன் பார்த்துக்கொண்டே சாப்பிடுகிறார்கள். அல்லது டிவி பார்த்துக்கொண்டோ, நண்பர்களுடன் அரட்டைடியத்துக்கொண்டே சாப்பிடுகிறார்கள். அப்படிச் சாப்பிடுவது நோயை வரவழைக்கும் என்கின்றனர் சித்தர்கள்.