தமிழக பாஜக வின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் மாநிலத் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல்குமார் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாஜக வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் இணைந்த நிர்மல் குமாருக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை அவர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிர்மல் குமார் தனது சமூக வலைதள பக்கங்களில் அதிமுக குறித்த பதிவுகளை நீக்கி உள்ளார். மேலும் எடப்பாடியார் FOR EVER என வைக்கப்பட்டிருந்த கவர் போட்டோவையும் நீக்கியுள்ளார்.