முதல்வர் விஜய் குறித்து பேச்சு..!! ரஜினியை சுழட்டி அடிக்கும் ‘Unrealistic Bots’ !

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக பின்னடைவைச் சந்தித்ததும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராக அரியணையில் ஏறியதும் நாம் அறிந்ததே. இந்தச் சூழலில், போயஸ் கார்டன் இல்லத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியது தான் இப்போது தமிழகத்தின் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

ரஜினியின் அந்தப் பேட்டி முடிந்து இரண்டு நாட்கள் கடந்த பின்னரும், அவருக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் நடக்கும் திட்டமிட்ட சைபர் தாக்குதல்கள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, கடந்த 48 மணி நேரமாக எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் கமெண்ட் செக்ஷன்களில் ரஜினிக்கு எதிரான தடித்த வார்த்தைகளுடனான பதிவுகள் குவிந்து வருகின்றன.

டிஜிட்டல் ஊடக வல்லுநர்கள் இதைக் கவனிக்கும்போது ஒரு அதிர்ச்சியான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நள்ளிரவு மற்றும் அதிகாலை 3 மணி போன்ற நேரங்களில் கூட, ஒவ்வொரு நிமிடமும் ரஜினிக்கு எதிராகத் திட்டமிட்ட முறையில் நெகட்டிவ் கமெண்ட்டுகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

இவை சாதாரண மனிதர்களால் சாத்தியமில்லாத வேகத்தில், முன்னரே புரோகிராம் செய்யப்பட்ட ‘அன்ரியலிஸ்டிக் பாட்’ (Unrealistic Bots) கணக்குகள் மூலமாகத் தூவப்பட்டு வருவது உறுதியாகியுள்ளது. ஒரே மாதிரியான வாசகங்கள் கொண்ட கமெண்ட்டுகள், வெவ்வேறான போலிப் பெயர்களில் இருந்து விநாடிக்கு ஒன்றாகப் பரப்பப்படுவதன் பின்னணியில் ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் சதி இருப்பதாகக் கூறப்படுகிறது.

செய்தியாளர் சந்திப்பில் விஜய் முதலமைச்சரானது குறித்துப் பேசிய ரஜினிகாந்த், “எம்ஜிஆர், என்டிஆர் செய்த சாதனைகளை விட விஜய்யின் சாதனை பெரியது. சக்திவாய்ந்த மத்திய அரசுக்கும், இரு பெரிய திராவிடக் கட்சிகளுக்கும் எதிராக நின்று இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்” என்று மனதாரப் பாராட்டினார்.

அதே நேரத்தில், ஒரு மூத்த நடிகராக “மக்கள் மத்தியில் விஜய் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது, அவர் திறம்படச் செயல்பட மக்கள் அவரை குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது விட்டுவிட வேண்டும்” என்று ஒரு ஆலோசனையை முன்வைத்தார். ஆனால், ரஜினி சொன்ன இந்த “2 ஆண்டுகள் அவகாசம்” என்ற கருத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு, அவர் விஜய்யின் நிர்வாகத் திறமையைக் குறைத்து மதிப்பிடுவது போலச் சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் திட்டமிட்டுத் திரித்துப் பரப்பத் தொடங்கியுள்ளனர்.

தனக்கும் விஜய்க்கும் 25 ஆண்டுகால தலைமுறை இடைவெளி இருப்பதால் போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், விஜய்யின் வெற்றி குறித்துத் தனக்கு எந்தப் பொறாமையும் இல்லை என்றும் ரஜினி மிகத் தெளிவாகக் கூறியிருந்தார். இருப்பினும், ரஜினியின் பிம்பத்தைச் சிதைக்கவும், புதிய முதலமைச்சர் விஜய் மற்றும் ரஜினிக்கு இடையே ஒரு மோதலை உருவாக்கவும் சில குறிப்பிட்ட கார்ப்பரேட் பின்னணி கொண்ட டிஜிட்டல் பிஆர் ஏஜென்சிகள் பின்னணியில் இருந்து இந்த ‘பாட்’ தாக்குதலை இயக்குகிறதா என்ற கேள்வி ரஜினி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழக டிஜிட்டல் அரசியல் களம் எவ்வளவு ஆபத்தான திசையில் நகர்கிறது என்பதைக் காட்டுவதோடு, ஒரு மூத்த கலைஞனின் ஆலோசனையைக் கூட அரசியலாக்கும் போக்கு வருத்தமளிப்பதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related News

Latest News