தகாத உறவு –  ஒருவருக்கு அரிவாள் வெட்டு

212

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவர் அதே பகுதியில் வசித்து வரும் நடராஜன் என்பவரின் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனையறிந்த நடராஜன், கருப்புசாமியிடம் அடிக்கடி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த நடராஜன், தனது நண்பர் ராகுல் என்பவருடன் சேர்ந்து, கருப்புசாமியை அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது.

அருகில் இருந்தவர்கள், கருப்புசாமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், நடராஜனை கைது செய்தனர்.

தப்பி ஓடிய ராகுலை போலீசார் தேடி வருகின்றனர்.