Saturday, April 26, 2025

Dheena: வீடு கட்டிய கையோடு கல்யாணம் பண்ண KPY தீனா …

சொந்த ஊரில் புது வீட்டு கட்டி முடித்த கையோடு பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் நடிகர் தீனா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தீனா. சின்னத்திரையில் தனக்கென ஒரு பெயர் அடுத்து அவர் தனுஷ் கண்ணில் பட்டார். தான் இயக்குநர் அவதாரம் எடுத்த ப. பாண்டி படம் மூலம் தீனாவை பெரிய திரையில் அறிமுகம் செய்து வைத்தார் தனுஷ். தன் முதல் படத்திலேயே தனுஷின் நண்பராக நடித்தார் தீனா. தன் இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.


மாதவன் கண்ணை பார்த்துவிட்டு இந்த பையன் வேண்டாம்னு சொன்ன மணிரத்னம்
லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் தீனா. இதையடுத்து தான் தளபதி விஜய்யை வைத்து இயக்கிய மாஸ்டர் படத்திலும் தீனாவை நடிக்க வைத்தார் லோகேஷ் கனகராஜ். கமல் ஹாசனின் விக்ரம் படத்திலும் வந்தார். தொடர்ந்து பெரிய திரையில் பிசியாகி விட்ட தீனா வாழ்வில் இன்று ஒரு நல்ல நாள்.


சொந்தமாக வீடு கட்டிய பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று தீனா முன்பு தெரிவித்திருந்தார். அண்மையில் தான் தன் சொந்த ஊரில் மூன்று அடுக்குமாடி வீடு கட்டி குடியேறினார். சொன்னபடியே வீடு கட்டிய பிறகு திருமணம் செய்து கொண்டிருக்கிறார். புது வீடு, கல்யாணம் கலக்குறீங்க தீனா என்கிறார்கள் ரசிகர்கள். தன் இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் தீனாவை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. அவரின் கெரியரில் மேன்மேலும் முன்னேற வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

Latest news